Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பக்திப்பூக்களைத் தூவுங்கள்

பக்திப்பூக்களைத் தூவுங்கள்

பக்திப்பூக்களைத் தூவுங்கள்

பக்திப்பூக்களைத் தூவுங்கள்

ADDED : ஜன 30, 2012 02:01 PM


Google News
Latest Tamil News
* பஞ்ச பூதங்களாலான இயற்கை இறைவனின் சொரூபமாகும். இயற்கையை பாதுகாத்தால் இறைவனுக்கு மரியாதை தந்தவர்கள் ஆவோம்.

* இறைவன் நம்மிடம் உள்ளார், அதற்கேற்ப நாம் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும். நற்பண்புகள் கொண்ட ஒழுக்கமான வாழ்க்கை மிகவும் முக்கியமானது.

* இறைவனை நினைத்துக் கசிந்து உருகிக் கண்ணீர் மல்கி வணங்குகிறோமே, அது தான் இறைவனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டிய நீராகும்.

* நம்முடைய இதயம் நந்தவனம் போன்றது. அதில் பக்திப்பூக்கள் மலர வேண்டும். அந்த மலர்களையே இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

* இறைவனின் திருப்பாதங்களை வணங்குவது, நமது கடமைகளை நல்வழியில் செய்து முடிப்பதற்கு வழிகாட்டும்.

* இறைவன் நமக்குள்ளேயே இருக்கிறார் என்று உணர்ந்தால் நல்லவற்றை நினைப்போம். அதையே செய்ய முற்படுவோம்.

* முயற்சியால் செல்வத்தைச் சேகரிக்க முடியும். அதேபோல், நற்செயல்களால் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள முடியும்.

- சாய்பாபா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us